தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் பெருமாநல்லூரில் நடத்திய சோதனையில் ரூ.2.33 லட்சம் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணம் எடுத்துச் செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.